வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க கண்காணிப்பு நடவடிக்கை.

அம்பாறையில்    நீண்ட காலமாக நிலவி வரும் யானை மனித மோதலுக்கான விரைவில் தீர்வினை  பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில்  வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க  கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதற்கமைய அம்பாறை மாவட்டம் உகன மற்றும் மகாஓயா பிரதான வீதியின் இரு மருங்கிலும் திடிரென வருகை தருகின்ற  காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் குறைப்பதற்கு இன்று(6) காலை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது சுமார் 2 முதல் 4 வரையிலான யாகைகள் உகன பகுதியில் உள்ள மக்கள் செறிந்து வாழும் குடியிருப்பினை நோக்கி வருகை தந்திருந்ததுடன் அதனை விரட்டி அடிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் அமைச்சரின் ஆலோசனைக்கிணங்க வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிவில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டிருந்தனர்.

இந்த  உடனடி நடவடிக்கை  காரணமாக யானைகள் அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட்டதுடன் அப்பகுதியில்  மின்சார யானை வேலிகளை அமைத்து மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு டிபணிப்புரை வழங்கினார்.

மேலும்  அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கமைய  அம்பாறை மகாஓயா பிரதான வீதி காபற் இடுதல் மற்றும் யானைகள் பாதை மாறி செல்லுதல் உள்ளிட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டு எச்சரிக்கை விளம்பர பதாதைகள நிர்மாணிப்பது தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டு தீர்வுகளும் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது  வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க ஊடக செயலாளர்  வசந்த சந்திரபால உட்பட அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.