கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முந்நூறு கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது.

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முந்நூறு கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவரை நேற்றிரவு(6) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய்,வாத்தியாகம மற்றும் வென்ராசன்புர பகுதியைச் சேர்ந்த 32,மற்றும் 45 வயதுடைய இருவரையே கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் பிரதேசத்தில் கஞ்சா வியாபாரம் மேற்கொள்வதாக கந்தளாய் போப்பொருள் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் ஒருவரிடம் இருநூறு கிராம் கேரளா கஞ்சாவும்,மற்றொருவரிடம் 100 கிராம் கேரளா கஞ்சாவுடனும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்