திருகோணமலை சீனக்குடா தபால் நிலையத்தில் உலக தபால் தினம் அனுஸ்டிக்கப்பட்டது…

உலக தபால தினத்தை சிறப்பிக்கும் முகமாக இன்றைய தினம் திருகோணமலை சீனக்குடா தபால் நிலையத்தில் தபால் அதிபர் எஸ்.சிவினந்தராசா தலைமையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட தபால் அத்தியட்சகர் க.அருட்செல்வம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்
147வது தபால் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 30 குடுப்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன், கொவிற் தடுப்பு
விழிப்பணர்வு செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி வீதியால் பயணம் செய்த 300 பேருக்கு முக கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்