பாண், பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்க நேரிடும்

(க.கிஷாந்தன்)

சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக அனைத்து வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என மலையகத்தில் உள்ள வெதுப்பக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், இன்று முதல் பாண், பனிஸ் உட்பட வெதுப்பக உணவுகளின் அனைத்து விலைகளும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் பனிஸ் உட்பட அனைத்து பேக்கரி வகை பொருட்களும் 5 ரூபா முதல் 10 ரூபா வரையில் விலை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்