இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா -2021

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா -2021

ஏழாம் நாள் நிகழ்வு

இந்நிகழ்வானது சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் 12.10.2021 இன்று
காரைதீவு அறங்காவலர் ஒன்றியத்தின் தலைவர் இரா.குணசிங்கம தலமையில் இடம்பெற்றதுடன் அறநெறிபாடசாலை மாணவர்களின்
ஓங்காரம்
அஸ்ரோத்திரம்
பஜனை
பூசை நிகழ்வுகள்
மாணவர்களின் பேச்சுக்கள்
வயலின் சமர்பணம்
வில்லுப்பாட்டு
மற்றும் மாணவர்களின்
கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றதுடன் இன்றைய நிகழ்வில் ஆசியுரையினை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பிரதமகுரு சிவஶ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் நிகழ்த்தியதுடன் யாழ்பல்கலைக்கழக மாணவன் எஸ். டனேஸ் அவர்களினால் வயலின்சமர்பண நிகழ்வும் மற்றும் பண்ணிசை வளவாளர் திருமதி புவனேஸ்வரி அவர்களின் ஒழுங்கமைப்பில் அமைக்கப்பட்ட அறநெறி மாணவர்களின் வயலின் சமர்பண நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் உலக புகழ்வாய்ந்த ஓவியர் திரு பத்மவாசன் அவர்களின் வாழ்த்துரையும், அறங்காவலர் ஒன்றிய செயலாளர் எஸ். நந்தேஸ்வரன் அவர்களினால் சிறப்புரையும் இடம்பெற்றதுடன்
இந்நிகழ்வில் காரைதீவிலுள்ள சகல ஆலயங்களின் இந்துக்குருமார்கள்,ஆலய தர்மகர்த்தாக்கள், தலைவர்கள், நிருவாகசபை உறுப்பினர்கள்,
.இந்து சமய கலாசார உத்தியோகத்தர்கள்,
மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டதுடன் கலை நிகழ்ச்சியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.