வாழ்வோசை செவிப்புலனற்ற பாடசாலை மாணவர்களுக்கான இலவச டெப் வழங்கி வைக்கும் நிகழ்வு…

கொவிட் 19தொற்று நோய்க் காலங்களின் போது செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களின் சமத்துவமானதும், தரமானதுமான தொலைதூரக்கல்விக்கு உதவும் வகையில் மட்டக்களப்பு YMCA நிறுவனத்தின் ஊடாக இயங்கி வரும் வாழ்வோசை செவிப்புலனற்ற பாடசாலை மாணவர்களுக்கான வீட்டுமுறைக்கற்றலை மேம்படுத்தும் வகையில் இலவச டெப் வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
சுமார் 30க்கு மேற்பட்ட செவிப்புலனற்ற பாடசாலை மாணவர்களுக்கும் அத்துடன் இவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் மற்றும் சிம் வழங்கிவைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அரச அலுவலக வெளிக்கள  உத்தியோகத்தர்களுக்கு வழங்கும் ஆறுமாத சைகைமொழி பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வும் நடைபெற்றது.
YMCA நிறுவனத்தின் பொதுச்செயலாளர் ஜெகன் ஜீவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் மற்றும் மாவட்ட சமூக சேவை உத்தோயோகத்தர் எஸ்.அருள்மொழி, மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக முறைசாரா கல்விக்கான விசேட கல்விப்பணிப்பாளர் எம்.தயானந்தன், விசேட கல்விக்கான சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர் எஸ்.சசிகுமார், மாணவர்களின் வீட்டுமுறைக்கற்றலுக்கு டெப்பிற்காக நிதி உதவி வழங்கிய நீலன் திருச்செல்வம் அறக்கட்டளை அமைப்பின் பிரதிநிதி புண்ணியமூர்த்தி ஜெயதீபா உட்பட அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.