படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ம.நிமலராஜனின் 21ம் ஆண்டு நினைவேந்தல்…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ம.நிமலராஜன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு தீபச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்   பா.அரியநேத்திரன் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
யாழில் யுத்தம் உக்கிரமாக இருந்த வேளையில் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் யாழ்ப்பாணத்திலிருந்து தற்துணிவுடன் செய்திகளை வெளிக்கொணர்ந்தவர் ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்கள்.
யாழ். மாவட்ட செயலகத்திற்கு அண்மையிலுள்ள அவரது வீட்டில் வைத்து அடையாளந்தெரியாத ஆயுததாரிகளால் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இரவு நிமலராஜன் சுட்டுப்  படுகொலை செய்யப்பட்டார்.
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 21 ஆண்டுகாளாகியும் சூத்திரதாரிகள் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.