அக்கரைப்பற்றில் யூத் தமிழின் மீலாத் தின நிகழ்வு !

அக்கரைப்பற்று யூத்தமிழ் ஏற்பாட்டில் இறைதூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் பிறந்த றபிஉல் அவ்வல் மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் ‘உஸ்வதுல் ஹசனா’ மீலாதுன் நபி விழா நிகழ்வுகள் அக்கரைப்பற்று  தனியார் விடுதியில் முன்னாள் நீர்ப்பாசன உத்தியோகத்தர் ஐ.எல்.எம். சம்சுத்தீன்  தலைமையில் நடைபெற்றது.

யூத்தமிழ் பிரதானி  எம்.எஸ்.எம்.பிஸ்ரின்,  பணிப்பாளர் ஏ.பி.நூறுல்லாஹ் ஆகியோரின் நெறிப்படுத்தலில்  நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலீபதுல் ஹல்லாஜ் அப்துல் மஜீத் மக்கத்தாரும் விசேட சொற்பொழிவாளர்களாக மௌலவி ஏ.ஜி.அப்துல் றஊப் (இஸ்லாஹி) மற்றும்  மௌலவி.ஏ.சீ.எம். முஹ்யித்தீன் (மன்பயி), மௌலவி ஏ.சி.எம்.நிஷாத் (ஷர்க்கி) ஆகியோர்  கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார்கள்.

நாட்டில் சாந்தி, சமாதானம்,  இன ஐக்கியம், கொரோனா நோய் முற்றாக ஒழிய வேண்டி துஆப்பிராத்தனையும் இந்நிகழ்வில் இடம்பெற்றது. முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் சுற்று நிருபத்தின் கொவிட் – 19 வழிகாட்டலுக்கமைய நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.