நீர் வழங்கல் அமைச்சின் திட்ட இணைப்புச் செயலாளராக ராசிக் ரியாஸ்தீன் நியமனம்

நீர் வழங்கல் அமைச்சின் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களின் திட்ட இணைப்புச் செயலாளராக ஜனநாயக இடதுசாரி முண்ணனியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராசிக் றியாஸ்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனக் கடிதத்தை கொழும்பில் உள்ள அமைச்சில் வைத்து இன்று (22) அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சரத் ரணசிங்க அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
கிண்ணியா பிரதேச செயலகப் பகுதி,தோப்பூர்,தெகியத்தகண்டி ஆகிய பகுதிகளுக்கான திட்ட இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொது மக்களின் குடி நீர் இணைப்புக்கள் தொடர்பில் மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக இது அமையப் பெற்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.