உரத்தை வழங்குவதற்கு அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

 உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உரத்தை வழங்குவதற்கு அரசு  உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து  பெறப்பட்ட கதிரைகள், நீர் தாங்கிகள், கூடாரங்கள் என்பன இன்று (27.10.2021) அக்கரப்பத்தனை ஹோல்புறுக் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வைத்து பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கொட்டகலை, அக்கரப்பத்தனை, லிந்துலை, டயகம உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கே இவ்வாறு இராதாகிருஷ்ணனின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

” முன்னேற்பாடுகள் எதுவும் இன்றி இரசாயன உரத்துக்கு திடீர் தடை விதிக்கப்பட்டதால் விவசாயிகள் இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சீனாவில் இருந்து சேதனப் பசளையை இறக்குமதி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது. அந்த சேதனப் பசளையில் தீங்கு விளைவிக்கக்கூடிய பக்ரீரியாக்கள் இருப்பதாக எமது நாட்டு ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டினர். ஆய்வுகள்மூலம் அதனை உறுதிப்படுத்தினர்.

எனினும், இலங்கை நிறுவனத்தால் நடத்தப்பட்ட பரிசோதனையை ஏற்பதற்கு சீன நிறுவனம் மறுத்துள்ளது. இதனால் மூன்றாம் தரப்பை நாடுவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அனுமதிக்க முடியாது. மூன்றாம் தரப்பை நாடுவது எமது நாட்டிலுள்ள புத்திஜீவிகளை, ஆய்வாளர்களை அவமதிக்கும் செயலாகவே அமையும்.”  – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.