சாய்ந்தமருதில் பல்நோக்கு கூட்டுறவு சங்க பல்பொருள் விற்பனை நிலையம் திறப்பு.

சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் 50 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத்தில் புதிய பல்பொருள் விற்பனை நிலையமொன்று இன்று (28)  திறந்து வைக்கப்பட்டது
சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்க
நிர்வாகத்தலைவர் எம்.எம். உதுமா லெப்பையின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பல்நோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத்தை திறந்து வைத்தார்.
கல்முனை பிராந்திய கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கலாதேவி உதயராஜா கௌரவ அதிதியாக கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். அஸீம், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள பிராந்திய அதிகாரிகள், அம்பாறை மாவட்ட ஏனைய கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்க இயக்குனர் சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது பிரதேச செயலக அதிகாரிகள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது ஜும்மாப்பள்ளிவாசல் பேஸ் இமாம் எம்.ஐ.எம். ஆதம்பாபா (ரஸாதி)வின் துஆ பிராத்தனையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்க தலைவர் எம்.எஸ்.எம். முபாரக் முதலாவது வாடிக்கையாளராக கலந்து கொண்டு வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்