மின்னல் தாக்கி சிறுவன் பலி.
முல்லைத்தீவு – துணுக்காய், தேராங்கண்டல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (26) மாலை 14 வயது சிறுவன் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
தேராங்கண்டல் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் 9இல் கல்வி பயின்ற சசிக்குமார் ஆதவன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த சிறுவன் தேராங்கண்டல் குளப் பகுதியில், நபர் ஒருவருடன் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
சிறுவனுடன் இருந்த நபர் சிறு காயங்களுக்கு உள்ளானார்.
கருத்துக்களேதுமில்லை