இளைஞர் சமூகத்தில் 60 வீதமானோருக்கு தடுப்பூசி

நாட்டின் சனத்தொகையில் 70 வீதமானோருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரின் சுகாதார அமைச்சில் அவர் நேற்று (29) சந்தித்தார். நாட்டின் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியேற்றப்பட்டுள்ளது. 20 வயதிற்கும் 29 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர் சமூகத்தில் 60 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டிருக்கிறது.

15 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட 32 சதவீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். ‘பூஸ்ட்டர்’ தடுப்பூசியும் வழங்கப்படவுள்ளதாக அவர் இதன் போது கூறினார். முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய குழுவினர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கென 10 இலட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கு நாளாந்தம் 4 இலட்சம் தடுப்பூசிகள் கிடைப்பதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் ஊடாக கொரோனா ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு 100 மில்லியன் யூரோக்களை சலுகைக் கடனாக வழங்குவது பற்றியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் இதன் போது கவனம் செலுத்தினார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்