பாலடுவ கெத்தாராம புராதன விகாரையின் புனரமைக்கப்பட்ட சுவரோவியங்களுடன் கூடிய புத்த மாடம் திறந்து வைப்பு

மாத்தறை பாலடுவ கெத்தாராம புராதன விகாரையில் புனரமைப்பு பணிகள் நிறைவுசெய்யப்பட்ட சுவரோவியங்களுடன் கூடிய புத்த மாடம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (29) பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது.

சுவரோவியங்களுடன் கூடிய புத்த மாடத்தை பக்தர்களுக்காக திறந்து வைக்கும் நிகழ்வில் கௌரவ பிரதமர் அலரி மாளிகையில் இருந்து ஸும் தொழில்நுட்பம் ஊடாக இணைந்து கொண்டார்.

தமது புதல்வரான காலஞ்சென்ற லனில் கல்பட அவர்களின் 10ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாத்தறை கராஜ் உரிமையாளர் திரு.ஜீ.கே.ஜினதாச மற்றும் திருமதி.சந்திரா பியசீலி ஆகியோரது நிதி நன்கொடையில் இந்த புத்த மாடத்தின் புனரமைப்பு பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

ஹுணுபிட்டிய கங்காராம விகாராதிபதி கொழும்பு நவ கோரளையின் பிரதான சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய கலாநிதி கல்பொட சிறி ஞானீஸ்ஸர தேரரின் அனுசாசனத்திற்கு அமைய கெத்தாராம புராதன விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய கிருவாபத்துவ தேரர் உள்ளிட்ட மாத்தறை ஹம்பாந்தோட்டை ஆகிய இரு மாகாணங்களினதும் துணை பிரதான சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய பாலடுவே ஜினரதன தேரரின் அழைப்பிற்கேற்ப விகாரையின் பிக்குமார் மற்றும் அறங்காவல் சபையின் பங்களிப்புடன் இந்த உன்னத பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை ஹம்பாந்தோட்டை ஆகிய இரு மாகாணங்களின் துணை பிரதான சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய ஜினரதன தேரர், ஹுணுபிட்டிய கங்காராம விகாராதிகாரி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்கள், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் ஸும் தொழில்நுட்பம் ஊடாக இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.