பிரதேச செயலகங்களின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி தின போட்டிகளும் நிகழ்வுகளும் !

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நாவிதன்வெளி பிரதேச செயலகம் நடத்திய மீலாதுன் நபி தின மாணவர் கலை, கலாசார நிகழ்ச்சி பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.ஷினாஸின் நெறிப்படுத்தலில் சாளம்பைக் கேணி ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கு அமைய நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றிம்ஸான் அதிதியாக கலந்து கொண்டார். இதில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.அஸாத், ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தினர், மாணவர்களை ஆற்றுப்படுத்திய ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் சாய்ந்தமருது பிரதேச செயலகம் நடத்திய மீலாதுன் நபி தின மாணவர் கலை, கலாசார நிகழ்ச்சி பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அஷ்ரபின்  நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக்கின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கு அமைய நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தேசிய மீலாத் நினைவு தினத்தை ஒட்டி மாணவர்களுக்கிடையே பேச்சுப் போட்டி நடாத்தப்பட்டு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.