ஆட்சியாளர்களிடம் தைரியமாக நெஞ்சை நிமிர்த்தி கேள்வி கேட்பதற்கு தகுதி உடையவர் அதாவுல்லா மாத்திரமே !

பொது விடயங்களில் தனித்துவமாய் இருந்துவரும் தேசிய காங்கிரஸ் தலைவர் பாராளுமன்றத் தேர்தலில் தைரியமாக தனித்துப் போட்டியிட்டு தனது தனித்துவத்தை அடையாளப்படுத்தி யாருடைய கால்களிலும் மண்டியிடாமல் தனது அடையாளத்தை பாராளுமன்றத்தில் நிலைநிறுத்தி இந்த நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளகளுடன் கூட்டு ஒப்பந்தத்துடன் ஒன்றிணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். பிழை என்று தோன்றினால் தைரியமாக நெஞ்சை நிமிர்த்தி ஆட்சியாளர் களையும் கேள்வி கேட்பதற்கு இந்த அரசாங்கத்தில் உள்ள ஒரே ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் என்றால் அது அதாவுல்லா என்பது மிகையாகாது என அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ.எம். ஐயூப் தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவ து, எப்போதும் ஒரே கொள்கையுடன் பயணித்துக் கொண்டிருக்கும் தேசிய காங்கிரசின் தலைவர் தற்காலத்தில் ஆட்சியாளர்களையும் கேள்வி கேட்பதற்கு தகுதியுடையவராக உள்ளார். முஸ்லிம்களின் விடிவுக்காக பல கட்சிகள்  இருந்தாலும் யாவரும் இரண்டு தோணிகளில் பயணிப்பவர்கள் என்பதை தற்காலத்தில் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். தனது தேவைகளுக்காக நாம் தேர்தலை வெற்றி கொள்வதற்காக விமர்சித்தவர்களையும் தேர்தலின் பிற்பாடு அவர்களுடைய கால்களில் மன்றாடி சுகபோகங்களை அனுபவிப்பதற்காக பச்சோந்திகளாக அவர்களுடைய முகங்களை காட்சிப்படுத்துகிறார்கள்

எதற்காகவும் எப்போதும் சோரம் போகாது உளத்தூய்மையுடன் பயணித்துக் கொண்டிருக்கும் தேசிய காங்கிரசின் தலைவருடன் மக்கள் பயணிப்பதும் ஒரு அலாதியான விடயம்தான். எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு ஆளும் கட்சிக்கு தொடர்ச்சியாக ஆதரவுகளை வழங்கி இரண்டு முகங்களை அடையாளப்படுத்தும் பச்சோந்திகளாக இருப்பதைவிட எதுவாக இருந்தாலும் தனது தனி அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய காங்கிரசின் தலைமை காலத்தால் போற்றப்பட வேண்டியவர். பாராளுமன்றத்தி லும், ஊடகங்களிலும் குரலை உயர்த்திப் பேசுவதன்  ஊடாக எதை சாதிக்க முடியும் என்பதை இன்று படித்த மட்டமும் ,பாமரனும் அறியாமல் நடந்து கொள்வதை எண்ணி கவலை அளிக்கின்றது.

அறிக்கைகள் விடுவதன் ஊடாக எதையும் சாதிக்க முடியாது பேச வேண்டிய இடங்களை மௌனமாகவும் ஊடகங்களுக்கு காட்சிப்படுத்தும் இடங்களில் வேங்கையாக சிலர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் அதுதான் நமது மக்களுக்கும் தற்போது பிடிக்கின்ற விடயமாக மாறிவிட்டது. நன்கு சிந்தித்து செயல்பட வேண்டிய காலத்தில் பச்சோந்திகளின் இரட்டை வேடங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தால் இலங்கை வாழ் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்ற நிலை உருவாகி விட்டது. முற்றத்து மல்லிகை சிலருக்கு மணப்பதில்லை அதேபோல் கிழக்கின் காற்றை சுவாசிக்கும் நமது இன்னல்களை நன்றாக அனுபவித்து அனுபவம் வாய்ந்த எமது தலைமை தேசிய காங்கிரசின் தலைவர் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அதில் உண்மையும், நேர்மையும் இருக்கும் என்பதை நம்புகின்றோம். தேசிய காங்கிரஸின் தலைமைத்துவம் எடுக்கும் எந்த முடிவுக்கும் தலை சாய்க்க முடியும் என்பது தற்காலத்தில் மக்கள் உணர்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.