மாகாணப்பணிப்பாளர் நவநீதனின் பங்குபற்றலுடன் மாணவர்களுக்கான பக்கீர் பைத் பயிற்சிப் பட்டறை !

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த  “மாணவர்களுக்கான பக்கீர் பைத்  பயிற்சிப் பட்டறை -2021”  நிகழ்வு பொத்துவில் அல் அக்ஸா வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்ட கலாச்சார அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.எம். தெளபீக்கின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர்  சரவணமுத்து நவநீதன் கலந்து கொண்டார். மேலும் விஷேட அதிதிகளாக பொத்துவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில், பொத்துவில் பிரதேச செயலக கணக்காளர் எம்.ஏ. அப்துர் ரஹ்மான், பொத்துவில் அல் அக்ஸா வித்தியாலய அதிபர் என்.டீ. அப்துல் கரீம் ஆகியோரும் இவ்வேலைத் திட்டத்திற்கு உதவி இணைப்பாளராக செயற்படும் ஆலையடிவேம்பு கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.ஜவ்பர், பொத்துவில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்.எம்.எல்.எம். இஸ்ஸத் கலைஞர் கிராமத்தான் கலீபா உட்பட பல இலக்கிய ஆர்வலர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் வளவாளராகளாக கிழக்குமாகண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாசார உத்தியோகத்தர் எஸ்.ஏ.எம். நளீம் மற்றும் பொத்துவிலை சேர்ந்த யூ.எல். இப்றாகீம் ஆகியோர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.