ஒரேநாடு ஒரே சட்டம் செயலணியில் தற்போதைக்கு தமிழர்கள் இடம்பெறவேண்டிய தேவையில்லை- ஞானசார தேரர்

ஒரேநாடு ஒரே சட்டம் செயலணியில் தற்போதைக்கு தமிழர்கள் இடம்பெறவேண்டிய தேவையில்லை ஒரேநாடு ஒரேசட்டம் செயலணியில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் அவசியமில்லை என பொதுபலசேனாவின் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் இன்று கருத்து தெரிவிக்கையில்அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மூன்று முஸ்லீம் உறுப்பினர்கள் கூட அவசியமில்லை என நான் கருதுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். என்ன நடந்தாலும் இந்த நாட்டில் தமிழர்கள் இருக்கின்றார்களா முஸ்லீம்கள்இருக்கின்றாhகளா என கேட்கின்றார்கள் என தெரிவித்துள்ள அவர் ஏன் அப்படி கேட்கின்றார்கள் திறமையே முக்கியமானது திறமைக்கு வாய்ப்பளிக்கும்போது தமிழர் முஸ்லீம் சிங்களவர்கள் அவசியமில்லை என தெரிவித்துள்ளார். கண்டி தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டால் அதனை யாழ்ப்பாண தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்அதுவே உண்மை சொந்த சமூகத்திற்குள்ளேயே ஒற்றுமை இ;ல்லாத சூழ்நிலையில் பிரதிநிதிகளை தெரிவு செய்வது குறித்து நாங்கள் கவனமாகயிருக்கவேண்டும் என அவர்தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.