நாடு முழுவதும் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு?

__________________________________________________________ சந்தையில் லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயு வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்விரு வகை எரிவாயுக்களில் ஒன்றையும் கொள்வனவு செய்ய முடியாது எரிவாயு பாவனையாளர்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிய வருகிறது. லாஃப்ஸ் எரிவாயுவுக்கு டொலர் தட்டுப்பாடு உள்ளது. ஆனால் அது இன்னும் ஒரு நாளைக்கு 300 முதல் 400 தொன் எரிவாயுவை வழங்குகிறது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். வங்கிகளில் இருந்து டொலர்கள் வராததால் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வங்கிகள் கடனுதவிக் கடிதங்களை வழங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக லிட்ரோ எரிவாயுவின் தேவை அதிகரித்துள்ளதாகவும் லிட்ரோவின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.