நிந்தவூர் இஸட்.ரீ.எம்.ஆஷிக் தங்க பதக்கத்தை சுவீகரித்து இலங்கை மெய்வல்லுனர் குழாமில் இடம்பிடிப்பு !

இலங்கை இராணுவத்தையும் கிழக்கு மாகாணத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான பரிதி வட்டம் வீசுதலில் கலந்து கொண்ட நிந்தவூர் மதினா விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரர் இஸட்.ரீ.எம்.ஆஷிக் 46.85 மீற்றர் தூரத்தை எறிந்து தங்க பதக்கத்தை சுவீகரித்து கொண்டார். இவ் வெற்றியின் மூலம் இலங்கை மெய்வல்லுனர் அவர் குழாமில் இடம்பிடித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டிற்கான 99 வது தேசிய மெய்வல்லுனர் சம்பியனாக இலங்கை மெய்வலுனர் அணிக்கு பொதுநலவாய விளையாட்டு போட்டிக்கான  வீரர்களைத் தெரிவு செய்யும் தகுதிகாண் தெரிவு கடந்த சனிக்கிழமை (30)ம் திகதி கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது.

கொவிட் – 19 அசாதாரண  சூழ்நிலையில் இவ்வெற்றியை பெற பயிற்சிகளை மேற்கொள்ள இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மைதான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த இலங்கை தென்கிழக்கு பல்கலை கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர்  ரமீஸ் அபூபக்கர், தென் கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச்.ஏ.சத்தார் ஆகியோர்களுக்கு விஷேடமான  நன்றிகளை தெரிவிக்கும் மதீனா விளையாட்டு கழகத்தினர் தான் பிறந்த மண்ணுக்கும் தாய் நாட்டுக்கும் பெருமையை ஈட்டி கொடுத்த வீரர்   இஸட்.ரீ.எம்.ஆஷிக்கிற்கு  பாரட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.