கம்மன்பிலவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதி, பிரதமரிடம் கோரிக்கை

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அணுகுவது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் குறித்து எரிசக்தி அமைச்சராக பணியாற்றிக்கொண்டு கடுமையாக விமர்சித்தமை மற்றும் பசில் ராஜபக்ஷவின் பங்கு குறித்து விமர்சித்தமை இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

கம்மன்பில தலைமையிலான கட்சியின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதனால் அவர் அரசாங்கத்திலிருந்து வெளியேறினாலும் அரசாங் கத்திற்குப் பிரச்சினை ஏற்படாது
பாராளுமன்றஉறுப்பினர்கள் தெரித்துள்ளனர்.
இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் ஆகியோரிடம் அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் இது தொடர்பான அவருக்கு அறித்த பின்னர் இறுதி தீர்மானம் எட்டப்படும் என உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.