காரைதீவு விளையாட்டுக் கழக ஏற்பாட்டில் கரையோர பனை நடுகை வேலைத் திட்டம் ஆரம்பம் !

காரைதீவு விளையாட்டுக் கழகம் கரையோர பனை நடுகை வேலைத் திட்டத்தின் கீழ் இழந்த பனைவளத்தை புதுப்பிக்கும் நோக்குடன் 25000 பனை விதைப்பை, காரைதீவு கடற்கரை, காளி கோயில் பிரதேசங்களில் காரைதீவு பிரதேச செயலகம், பனை அபிவிருத்திச் சபை  அனுசரணையுடன் ஏற்பாடு செய்திருந்தது. இந் நிகழ்வு கல்முனைக் கார்மேல் பற்றிமா கல்லூரி பிரதி அதிபரும், பௌதிகவியல் பாட ஆசிரியரும், காரைதீவு விளையாட்டுக்கழக தலைவருமான கே. சசிகரபவன் தலைமை தாங்கினார்.

அந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்தீபன், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளரும், இயற்கை வள ஆர்வலருமான அம்ரிதா ஏயெம் என அறியப்படும் ஏ.எம். றியாஸ், காரைதீவு பிரதேச செயலக அதிகாரிகள், உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா, பனை அபிவிருத்தி சபை உதவிப் பணிப்பாளர், மற்றும் விளையாட்டுக் கழக அங்கத்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்