இன்று இலங்கை மின்சார சபைத் தலைமையகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ள தொழிற்சங்கங்கள்! —-

————— இலங்கை மின்சார சபையின் தலைமையகத்துக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப் படவுள்ளதாக இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணத்திலிருந்து பல தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் நண்பகல் வேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்க செயலாளரான ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார். அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்து செய்து அரசாங்கம் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தாலும், சுகவீன விடுமுறை அறிக்கையிட்டு போராட்டத்தை நடத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அமைச்சர்கள் மற்றும் பெரும்பாலான அரசாங்க உறுப்பினர்களுக்கு தெரியாமல் யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு மதத் தலைவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த ஒப்பந்தம் நாட்டுக்குப் பாதகமானது என்பது வெளிப்படையாகவே அரசாங்கத்தில் உள்ளகப் பிளவு மூலம் தெரிகிறது. அரசாங்கம் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால், பாரிய அளவிலான போராட்டங்களை நடத்து வதற்கான திகதிகளை அறிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.