அரச வங்கிகளின் கூட்டு உடன்படிக்கைகளைக் கைச்சாத்திடுமாறு கோரி வங்கி ஊழியர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு…

(சுமன்)

அரச வங்கிகளின் கூட்டு உடன்படிக்கைகளை உடன் கைச்சாத்திடுமாறு கோரிக்கையை முன்வைத்து இலங்கை, வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வங்கி அரச வங்கிகளின் ஊழியர்களது ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது.

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கைச்சாத்திடப்படும் அரச வங்கிகளின் கூட்டு உடன்படிக்கைகள் இவ்வருடம் கைச்சாத்திடப்பட வேண்டியது. ஆனால் நிதி அமைச்சினால் பதினொரு மாதங்களாகியும் இன்னும் அது கைச்சாத்திடப்படவில்லை என்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உடனடியாக நிதி அமைச்சினால் அவ்வுடன்படிக்கை கைச்சாத்திடப்பட வேண்டும் என்பதைப் பிரதானமாக வலியுறுத்தி இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் அரச வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, கிராமிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அரச வங்கிகளின் கூட்டு உடன்படிக்கைகளில் உடனே கைச்சாத்திடு, அத்தியாவசிய வங்கிச் சேவைக்கு கூட்டு உடன்படிக்கை தேவையில்லை என தமிழிலும் சிங்களத்திலும் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்