பொது இடங்களில் கொவிட் அட்டை அவசியம் : அமைச்சர் வெளியிட்ட தகவல்

பொது இடங்களுக்கு செல்லும் போது, கொவிட் தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வது கட்டாயமாக்கும் விடயம் குறித்து ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கும், கனடா தூதுவர் டேவிட் மெகினனிற்கும் இடையிலான சந்திப்பின் போதே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

கனடாவில் பொது இடங்களில் இந்த அட்டையை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தூதுவர், இதன்போது அமைச்சரிடம் கூறியுள்ளார்.

தொற்று பரவாதிருப்பதற்கும், தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் நோக்குடனுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.