பிரதேசவாதம் கடந்து சம்மாந்துறையில் வசிக்கும் முஸ்லிம், தமிழ் சகோதர்கள் ஒன்றுமையாக இருக்க வேண்டும் – இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான்.

சம்மாந்துறை விளையாட்டு வீரர்களுக்கான பொது மைதானம் பல வருடங்களின் பின் உருவாகிக் கொண்டு வருகின்றது. இருந்தாலும் கடந்த காலங்களில் நாம் பயன்படுத்தி வரும் பொது மைதானத்தில் பல சிக்கல்கள்  உருவாகின. நாங்கள் பிரதேசவாதம் கொண்டோரில்லை. சம்மாந்துறையில் வசிக்கும் முஸ்லிம், தமிழ் சகோதர்கள் ஒன்றுமையாக இருக்க வேண்டும் என்பதுவே எனது அவா. பொதுநலமான முறையில் தால் பொது மைதானப் பிரச்சினையில் தலையிட்டேன். அப்பிரதேச மக்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் குந்தகம் விளைவிக்காமல் மைதானத்தை பாதுகாக்க போராடினேன். ஏதோ ஒரு வகையில் அனைவரின் ஒத்துழைப்போடும் இன்று பிரச்சினைகள் முடிவுற்று உள்ளன என இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் தெரிவித்தார்.

கல்லரைச்சல் பிரமியர் லீக் சுற்றுப் போட்டியின் மூன்றாவது பருவ கால போட்டிக்கான அணிகளின் சீருடை அறிமுக நிகழ்வு ஆசிரியர் ஏ.சி.எம். நையிமின் தலைமையில் சது/ தாருஸ்ஸலாம் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய அவர்,

சம்மாந்துறை பிரதேச விளையாட்டு வீரர்களுக்காகவும், இளைஞர்களுக்காகவும் மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் அவர்களின் கருப்பொருளில் உருவாக்கப்பட்ட விளையாட்டு கட்டிடத்தொகுதி இன்று வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இளைஞர்களின் தேவைப்பாடுகளும் முற்றிலும் நிறுத்தி கல்யாண மண்டபகமாகவும், கலியாட்ட அரங்கமாகவும் செயற்படுகின்றது. இதனை உடனடியாக நிறுத்தி மாகாண அரசு அல்லது தேசிய அரசின் கீழ் கொண்டு வந்து உரிய நிதிகளை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றேன்.

கல்லரைச்சல் பிரமியர் லீக் போன்ற தொடர்கள் இடம்பெறுவதால் எமது பிராந்தியத்தில் காணப்படும் திறமையான வீரர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர். எமது பிராந்தியத்தில் பல திறமையான வீரர்கள் எமதூரிலையே அதிகமாகக் காணப்படுகின்றனர். அவர்களின் இடத்தினை எதிர்காலத்தில் உருவாகும் வீரர்கள் கொண்டுதான் நிரப்ப முடியும். இவ்வாறான தொடர்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதால் பல வீரர்கள் தங்களுடைய திறன்களை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிடைக்கின்றன. இவ்வாறு தெரிவு செய்யப்படும் வீரர்களைக் கொண்டு மாவட்ட மட்ட, மாகாண மட்ட போட்டிகளுக்கு எமது அணிகளை தயார்படுத்த வேண்டிய தேவையில் உள்ளோம். எமதூர் இளைஞர்கள், கழங்கள், நலன் விரும்பிகள் அனைவரும் ஊரின் நல் வளர்ச்சிக்காக பங்கெடுக்க வேண்டும். சில மாற்றங்களை தாண்டி பல மாற்றங்கள் நோக்கி காய் நகர்த்த வேண்டிய காட்டாயக் காலம் உருவாகி இருக்கின்றது. இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைந்தாலும் நான் எம் சமூகத்தின் விடிவுக்காக தொடர்ந்தும் பயணிப்பேன் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.