கல்வியங்காடு செங்குந்தா பொதுச்சந்தை வியாபாரிகள் யாழ் மாநகர சபை மீது கடும் விசனம்.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்தா பொதுச்சந்தையில் பல குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படமால் இருப்பதாக வர்த்தகர்கள் வியாபாரிகள் சந்தை நடத்துனர் மற்றும் சமூக நலன் விரும்பிகள் என பலர் யாழ் மாநகரசபை மீது கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
பல குறைபாடுகளை சுட்டிக்காட்டி தொடர்ச்சியாக பல கடிதங்கள் நேரடி கலந்துரையாடல்களை மேற்கொண்ட போதும் யாழ் மாநகரசபை அதிகாரிகள் எந்தவித நடவடிக்ககைகளும் மேற்கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்கள் .
குறித்த சந்தை தொடர்பாக சந்தை நடத்துனர் கருத்து தெரிவிக்கையில் ,
குறிப்பாக பொதுச்சந்தை வளாகத்தில் கோழி விற்பனை மற்றும் மீன் வெட்டுதல் வியாபாரிகளுக்கு கொட்டகை அமைத்து கொடுப்படாமையால் மழைகாலத்தில் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது மற்றும் மரக்கறி கட்டத்தொகுதி கூரை மேல் விழுகின்ற மழை நீர் பீலியால் வடிந்து ஒடாது தேங்கி நிற்பதோடு  கடுமையான மழை நேரத்தில் பறக்கின்ற அதிகளவான மழை நீர் துவானம்  போன்ற பிரச்சனைகள் முக்கிய பிரச்சனையாக காணப்படுகின்றது. சந்தை நடத்துனர் என்ற முறையில் சந்தையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தாருங்கள் என பல தடவைகள் மாநகர சபையிடம் கோரிக்கை விடுத்தும் உரியவர்கள் செவிசாய்ப்பதாக தெரியவில்லை என சந்தை நடத்துனர் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
குறித்த விடயங்கள் தொடர்பாக  யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கல்வியங்காட்டு சந்தை கட்டத்தொகுதிக்கு முதல் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த  போது குறித்த பொகுச்சந்தையில் காணப்படும் குறைபாடுகளை கேட்டறிந்ததோடு உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாக உறுதிமொழி வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.