பட்டிப்பளை பிரதேச மக்களுக்கான விதைப்பொதிகளை வழங்கி வைத்தார் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!!
நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கை திட்டமிடலுக்கு அமைய விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இன்று 2021.11.06 நடைபெற்றது.
பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் வழிகாட்டலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உழுந்து மற்றும் பயறு பயிர்ச் செய்கைத் திட்டத்தின் கீழ் குறித்த விதை பொதிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் உழுந்து விதை பொதிகள் 213 பயனாளர்களுக்கும், பயறு விதை பொதிகள் 230 பயனாளர்களுக்கும், இஞ்சி கிழங்கு பொதிகள் 08 பயனாளிகளுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.
பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்ட குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.தட்சணகெளரி தினேஷ், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஸ்பலிங்கம், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















கருத்துக்களேதுமில்லை