பாசிக்குடாவில் விபச்சார விடுதி முற்றுகை ! மூன்று பெண்கள் கைது.

கல்குடா பொலிஸ் பிரிவில் ஆயுர்வேத மசாஜ் நிலையத்தின் பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியினை முற்றுகையிட்ட போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்ஹவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு குற்ற விசாரணை பிரிவினர் மற்றும் கல்குடா பொலிஸார் இணைந்து நேற்று மாலை ஆயுர்வேத மசாஜ் நிலையத்தினை முற்றுகையிட்ட போது அங்கிருந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அவிசாவளை மற்றும் பொலனறுவை பகுதியினைச் சேர்ந்த 21, 33, 38 வயதுடைய பெண்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் நேற்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் எச்.எம்.எம்.பஸீல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 19ம் திகதி வரை சமூகநோய் தொடர்பான அறிக்கை பெறுவதற்காக தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்