கடுக்காமுனையில் இடைப்போக நெல் அறுவடை விழா!!

கடுக்காமுனையில் இடைப்போக நெல் அறுவடை விழா!!
மட்டக்களப்பு கடுக்காமுனையில் மூன்றாம் போக நெல்
அறுவடை விழா கடுக்காமுனை கமநல அமைப்பின் தலைவர் தி.ருதாகரன் தலைமையில்  நடைபெற்றது.
கடுக்காமுனை வில்லுக்குளத்து நீரனை பயன்படுத்தி இடைப் போகத்தினை மேற்கொள்வதற்கு இப்பகுதி விவசாயிகளுக்கான அனுமதியினை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பெற்றுக்கொடுத்தமையினைத் தொடர்ந்து இம்முறை 95 ஏக்கர் செய்கை பண்னப்பட்டமையினால் அப்பகுதியை சேர்ந்த 63 விவசாய குடும்பங்கள் நன்மையடைந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் செய்கைபண்னப்பட்ட வயல்களை அறுவடை செய்யும் விழாவிற்கு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், அறுவடையினையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.
குறித்த அறுவடை விழாவிற்கு சிறப்பு அதிதிகளாக மண்முனை தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம், பிரதேச சபையின் உறுப்பினர் வை.சந்திர மோகன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் வீ.ராஜகோபாலசிங்கம், பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஸ், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலயங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முற்போக்கு தமிழ் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச்செயலாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.