முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நிமலன் சௌந்தரநாயகம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு தினத்தில் தமிழரசு வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு…
(சுமன்)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஆசுலி நிமலன் சௌந்தரநாயகம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் முறக்கெட்டான் சேனையில் மாபெரும் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உதிரம் கொடுப்போம் எம் மக்களின் உயிர் காப்போம் என்ற தொனிப்பொருளுக்கமைவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் நினைவு தினத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், தமிழரசு வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், வாலிபர் முன்னணியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.








கருத்துக்களேதுமில்லை