ஸ்ரீ வஜிராஷ்ரம பௌத்த மத்தியநிலையத்தில் கௌரவ பிரதமரின் பங்களிப்புடன் கட்டின திருவிழா இடம்பெற்றது.

கொழும்பு 10 ஸ்ரீ வஜிராஷ்ரம பௌத்த நிலையத்தின் வருடாந்த கட்டின மஹா திருவிழாவில் பிக்குமார்களுக்கான புதிய காவி உடை (கட்டின சீவர) இன்று (14) அதிகாலை அலரி மாளிகையிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனையின் பேரில் இக்கட்டின திருவிழா, கௌரவ பிரதமரின் பாரியார் திருமதி. ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றது.

ஸ்ரீ வஜிராஷ்ரம பௌத்த மத்தியஸ்தானாபதி வணக்கத்திற்குரிய வடினாபஹ ஒசோமானந்த தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினரை முன்னிலைப்படுத்தி ஸ்ரீமால் விக்ரமசிங்க உள்ளிட்டோர் அலரி மாளிகையிலிருந்து ஸ்ரீ வஜிராஷ்ரம பௌத்த மத்தியநிலையத்திற்கான கட்டின ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

பிக்குமார்களுக்கான புதிய காவி உடையை (கட்டின சீவர) மஹாசங்கத்தினருக்கு தானம் செய்யும் நிகழ்வில் ஸ்ரீலங்கா ராமக்ஞா மஹா நிகாயவின் மஹாநாயக்கர் மகுலேவே விமல தேரர், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் கும்புருகமுவே வஜிர தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் பங்கேற்றிருந்தனர்.

குறித்த நிகழ்வில் பிரதமரின் மேலதிக செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன, பிரதமரின் பௌத்த விவகாரங்களுக்கான பிரத்தியேக செயலாளர் ஏ.எம்.ரத்நாயக்க உள்ளிட்ட பிரதமர் அலுவலகத்தின் சமய விவகாரங்களுக்கான பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.