இலங்கையில் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் – ஹேமந்த ஹேரத்

இலங்கையில் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிவரும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், எதிர்காலத்தில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலை ஏற்பட்டால் மீண்டும் போக்குவரத்து பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்