50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில்ஆலம்குளம் உள்ளக வீதிகள் அபிவிருத்தி : அபிவிருத்தி பணிகளை எஸ்.எம். சபீஸ் ஆரம்பித்து வைத்தார்

50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில்ஆலம்குளம்  உள்ளக வீதிகள் அபிவிருத்தி :  அபிவிருத்தி பணிகளை எஸ்.எம். சபீஸ் ஆரம்பித்து வைத்தார்

மாளிகைக்காடு நிருபர்

கிராமிய வீதி மற்றும் அத்தியவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் நிதியொதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்படவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஆலம்குள வீதிகளை அபிவிருத்தி செய்யும் உத்தியோகபூர்வ அங்குராப்பண வைபகம் இன்று அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களின் சம்மேளன தலைவரும், அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுமார் 50 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் நடைபெறவுள்ள இந்த அபிவிருத்தி திட்ட ஆரம்ப நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் ஐ. எச்.அப்துல் வஹாப், மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகரவின் இணைப்பாளர் அப்துல் காதர் றிசாத், அப்பகுதி கிராம நிலதாரி பள்ளிவாசல்களின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என  பலரும் கலந்துகொண்டிருந்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்