அனுராதபுரத்தில் குறைந்த வருமானம் பெறும் 100 குடும்பங்களுக்கு கௌரவ பிரதமரின் பிரத்தியேக நிதி நன்கொடையின் கீழ் குழாய் மூலமான குடிநீர் வசதி

அனுராதபுரத்தில் குறைந்த வருமானம் பெறும் 100 குடும்பங்களுக்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்  (19) பிற்பகல் குழாய் மூலமான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார்.

குழாய் நீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதை அடையாளப்படுத்தும் வகையில் ஐந்து குடும்பங்களுக்கு  கையளிக்கும் வைபவம் அநுராதபுரம் மிரிசவெட்டிய ரஜமஹா விகாரையில் இடம்பெற்றது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற தனது பிறந்த தினத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக கௌரவ பிரதமரின் பிரத்தியேக நிதி நன்கொடையில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தர், மிரிசவெட்டிய சைத்தியாராமாதிகாரி வணக்கத்திற்குரிய ஈதல வெடுணு வெவே ஞானதிலக தேரர், பேராசிரியர் வணக்கத்திற்குரிய இந்துருகாரே தம்மரதன தேரர், கங்காராம விகாராதிகாரி கலாநிதி வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர், கலாநிதி வணக்கத்திற்குரிய அக்ரஹார கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

பேராசிரியர் வணக்கத்திற்குரிய தம்மரதன தேரர் இதன்போது அனுசாசனம் நிகழ்த்தினார்.

சிங்கள துட்டகைமுனு தமிழ் எல்லாளனுக்கு எதிராகப் போரிட்டார். எல்லாள மன்னருக்கும் துட்டகைமுனு மன்னனுக்கும் இடையே நடந்த போரை வரையறுக்க முடியாது. காரணம் எல்லாளன் தமிழன் அல்ல. துட்டகைமுனு மன்னன் தமிழர் படைக்கு எதிராகப் போரிடவில்லை, படையெடுத்து வந்த சோலிப் படைக்கு எதிராகப் போரிட்டான். எனவே, சோழப் பேரரசின் படையெடுப்பாளர் மீது மன்னர் துட்டகைமுனு நடவடிக்கை எடுத்தார்.

எனவே யுத்தம் என்பது பயங்கரவாதத்திற்கு அறிந்த மொழியில் பதிலளிப்பதே ஆகும். யுத்தம் என்பது இரு நாடுகளுக்கு இடையே நடப்பதாகும். அதனால் இலங்கையில் யுத்தம்  நடக்கவில்லை.

ஐரோப்பிய முகவர்கள் மற்றும் உள்ளூர் முகவர்களின் சலசலப்பை இறுதி நொடியில் நிறுத்துவதற்கு ஹெலிகொப்டரில் எம்பிலிபிட்டியவிற்கு சென்று முயற்சித்தார். அப்போது படையெடுப்பாளருக்கு எதிராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷவே எமது காலத்து அரசர்.

எமக்கு அதுவே முக்கியமானது. உருளைக்கிழங்கு, வெங்காய அரசியல் அல்ல. உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் குறைவடையும், அதிகரிக்கும். ஆனால், இந்நாட்டின் சுதந்திரம் என்ற விடயத்தை ஒருவர் தமிழ் மக்களுக்கு எதிரான தமிழ் இனப்படுகொலை என்று  வரையறுத்தார். அது அப்படியல்ல, அது ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகும். தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் நடத்தப்பட்டிருந்தால் முதலில் வெள்ளவத்தை மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். முதலில் கோவில்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

எனவே இன்று இந்த யுத்தத்தினால் பயனடைவது யார், சிங்களவர்களா இல்லை. சாதாரண மக்களா? அதுவும் இல்லை. வர்த்தகர்கள் அனைவருமே ஆவர். எனவே, உருளைக்கிழங்கைக் குறைக்கவோ, எரிவாயுவை அதிகரிக்கவோ இந்நாட்டு மக்கள் கேட்கவில்லை. அப்போது நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் கோரிக்கை. அதனால்தான் நாட்டு மக்கள் இன்னும் உங்களை நேசிக்கிறார்கள்.

எனவே, இந்நாட்டில் உள்ள இலட்சக்கணக்கான மக்கள் உங்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

இலங்கை வரலாற்றில் மன்னர்களின் வம்சத்திற்குப் பின்னர் மீண்டும் ஒருமுறை அண்மைக்கால வரலாற்றில் பெரும் தூபியான சந்தஹிரு சேயாவை அமைக்க சந்தர்ப்பம் ஏற்பட்டது. இந்த நாட்டில் எந்த அரசனுக்கும் இப்படி ஒரு ஆணை கிடைத்ததில்லை. இவ்வாறான பிறந்தநாள் பரிசுகள் வேறு எவருக்கும் கிடைக்கவில்லை என பேராசிரியர் இந்துராகாரே தம்மரதன தேரர் தெரிவித்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கௌரவ அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, யுத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தெங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.