இரசாயன உரம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது!

நெல் மற்றும் மரக்கறி உள்ளிட்ட பெரும்போக பயிர்ச் செய்கைக்காக இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர்,

“இரசாயனப் பசளை இறக்குமதியை தடை செய்யும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. சேதனப்பசளை பயன்பாட்டுக்கு தேவையான அனைத்து முன்னெடுப்புகளும் தொடர்ந்து இடம்பெறுவதாக தெரிவித்தார்.

இரசாயனப் பசளை இறக்குமதியை அரசாங்கம் அண்மையில் நிறுத்தியதோடு சேதனப்பசளை பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.

இதற்கு எதிராக சில விவசாய அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆனால் அரசாங்கம் இந்தியாவில் இருந்து நெனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. ஆனால் இரசாயனப் பசளை இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு சில தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வந்த போதும் அரசாங்கம் தொடர்ந்தும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.