மரக்கறிகளின் விலை அதிகரிப்பு- விவசாயத் துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மரக்கறியின் விலை அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ள, விவசாயத்தை பாதித்த உர நெருக்கடி தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

அதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் விவசாயத் துறை அதிகாரிகளுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட விவசாயத் துறையின் முக்கிய பங்குதாரர்களுடன் சந்திப்பொன்றை நடத்தி பாதிப்புகளை மதிப்பீடு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில், குறிப்பாக மலையகப் பகுதிகளில், காய்கறி அறுவடை வெகுவாகக் குறைந்துள்ளது.

உரம் இல்லாததால், தரம் மற்றும் அளவு ஆகிய இரண்டும் அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டதாக விவசாயிகள் முறைப்பாடளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.