கிளிநொச்சியில் நிகழும் வீதி விபத்துக்கள், பாடசாலை மாணவர்களின் மரணங்கள் தொடர்பில் பாராளுமனற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் கௌரவ ஆளுநருக்கு கடிதம்

கௌரவ. ஜீவன் தியாகராஜா
வடக்கு மாகாண ஆளுநர்
ஆளுநர் செயலகம்
யாழ்ப்பாணம்.
தொடரும் வீதி விபத்துக்களும் பள்ளி மாணவர்களின் மரணங்களும்.
கடந்த 2021.11.15 ஆம் திகதி காலை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்திற்கு (தேசிய பாடசாலை) முன்பாக
உள்ள பாதசாரிகள் கடவை மூலம் வீதியைக் கடக்க முற்பட்ட வேளை வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி வருகைதந்த அரச பேருந்தின் கட்டுப்படுத்த முடியாத கடும்வேகத்தால்ரூபவ் ஊற்றுப்புலம் பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியான செல்வி.மதுசாளினி திருவாசகம் (வயது.17) அவர்கள் பலியானதோடு அவருடன் இணைந்து பயணித்த அதே பிரதேசத்தைச்
சேர்ந்த பள்ளி மாணவியான செல்வி.கீர்த்தனா சசிக்குமார் (வயது.17) படுகாயமடைந்தமை அனைத்துத் தரப்பினரிடையேயும்
அதிலும் குறிப்பாக பெற்றோர்களிடையே ஆழ்ந்த துக்கத்தையும்ரூபவ் அச்ச நிலையையும் தோற்றுவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பொருண்மியம் நலிந்த கிராமமான ஊற்றுப்புலத்தில் பிறந்துவளர்ந்து
விறகுவெட்டி விற்றுப் பிழைக்கும் ஏழைத்தந்தையின் நிலையுணர்ந்து க.பொ.த. சாதாரண தரத்தில் திறமைச்
சித்திபெற்ற மாணவியான செல்வி.மதுசாளினி திருவாசகம் போக்குவரத்து வசதி மேலதிக வகுப்புக்கள் உள்ளிட்ட
தேவைப்பாடுகளின் நிமித்தம் உயர்தரம் குறித்தான எண்ணற்ற கனவுகளோடு நகர்ப்புறப் பாடசாலை நோக்கி
அனுமதிக்காக வந்த அன்றே பாதசாரிகள் கடவையில் வைத்துப் பலியாகியிருக்கும் சம்பவம்
மிகப்பாரதூரமானது.
இந்த மாணவியின் உயிர்ப்பலிக்கு பேருந்துச் சாரதியின் அதிகரித்த வேகமும் மனிதாபிமானத்திற்கு
அப்பாற்பட்ட பொறுப்பற்ற தன்மையுமே காரணம் என்பதை வெளியாகியுள்ள மறைகாண் ஒளிப்பதிவுக்
காணொளிகள் மூலம் அறிய முடிகிறது. எதிர்காலம் குறித்த ஏராளமான கனவுகளோடு உயர்தரக்
கல்விக்காக கிளிநொச்சி நகரை நோக்கி அடியெடுத்துவைத்த அன்றையதினமே உயிரிழந்த அந்த மாணவியின்
உயிரை மீட்கவோ எண்ணிலடங்கா இடர்பாடுகளுக்குள்ளும் தம் பிள்ளையை வளர்த்துகனவுகளோடு காத்திருந்த
பெற்றோருக்கு நேர்ந்திருக்கும் பேரிழப்பை ஆற்றுப்படுத்தவோ எம்மால் முடியாவிட்டாலும் இன்னோர்
பிள்ளைக்கும்அப்பிள்ளையின் குடும்பத்துக்கும் இத்தகு துயர்தோய்ந்த நிலை ஏற்படாதிருப்பதற்கான
ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய சமூகக் கடமை எம் எல்லோருக்கும் உள்ளது என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது.
கடந்த 2016.07.25ஆம் திகதியன்று காலை 07.15 மணியளவில் கிளிநொச்சி மத்திய ஆரம்ப
வித்தியாலயத்தில் தரம்.03 இல் கல்வி பயின்ற மாணவனான செல்வன்.ஜீவன் அகரன் (வயது.08) போக்குவரத்துப்
பொலிசார் முன்னிலையில் பாதசாரிகள் கடவையால் வீதியைக் கடக்க முற்பட்ட போது அதிவேகமாக வந்த
மோட்டார் சைக்கிள் மோதி தலைப்பகுதியில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உடனடியாகவே அனுராதபுரம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஒரு மாதத்திற்கு மேலாக உணர்திறனற்ற (கோமா) நிலையில் சிகிச்சைபெற்ற அவர் இன்றும் இயல்புக்கு திரும்பமுடியாத நிலையிலேயே வாழ்ந்து வருகிறார்.
அதே பாதசாரிகள் கடவையில் துவிச்சக்கரவண்டியோடு வீதியைக் கடக்க முற்பட்ட முதியவர் மீது அதிவேகமாக வந்த அரச பேருந்து மோதியதில் கடந்த 2020.07.23 ஆம் திகதி படுகாயமடைந்த முதியவர் ஒருவர் கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுரூபவ் சிகிச்சை பலனளிக்காது 2020.07.24 ஆம் திகதியன்று
உயிரிழந்திருந்தார்.
கடந்த 2020.08.24 ஆம் திகதியன்று கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலத்தில் (தேசிய பாடசாலை) கல்வி
கற்கும் தனது பிள்ளைகளை ஏற்றிவருவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற திருமதி.தசாயினி விக்னேஸ்வரன்
என்பவர் மீது பாடசாலைக்கு முன்பாகரூபவ் அதிகரித்த வேகத்தில் வந்த இராணுவ வாகனம் மோதியதில் அவர்
படுகாயமடைந்து மயிரிழையில் உயிர் பிழைத்திருந்தார்.

உதாரணத்துக்காக குறிப்பிட்டுச் சொல்லப்பட்ட மேற்படி நான்கு விபத்துக்கள் உட்படA .09 பிரதான வீதியில்
நிகழ்ந்த ஏராளமான கோர விபத்துக்களும் அதன் விளைவுகளும் அதிக வேகத்தினால் ஏற்பட்டவையே என்பதை தாங்களும்
அறிந்திருப்பீர்கள். அதனடிப்படையில் கீழ்வரும் விடயங்களை துரிதமாக செயற்படுத்துவது இக் காலத்திற்குப்
பொருத்தமாக இருக்குமென எதிர்பார்க்கிறேன்.
1. பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்ரூபவ் நிறைவடையும் நேரங்களில் மட்டுமன்றி பாடசாலைகள் இயங்கு நிலையிலுள்ள
நேரம் முழுமைக்கும் (குறிப்பாக பிரதான வீதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளில்) போக்குவரத்துப்
பொலிசார் கடமையில் ரூடவ்டுபடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளல்.
2. பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் வேகத்தடைகளை அமைத்தல்.
3. A.09 வீதியின் இருமருங்கிலும் பாதசாரிகளுக்கான நடைபாதையைக் குறிக்கும் வாகன வரையறைக் கோட்டிலிருந்து
நடைபாதைக்கென சிமெந்து அல்லது கொங்கிறீற்றிலான பாதை அமைத்தல்.
4. கிளிநொச்சி மாவட்டத்தினுடைய பிரதான வர்த்தகமையமான டிப்போச்சந்தியில் சுற்றுவட்டம் ஒன்று அமைக்கப்பட்டிருப்பின் அதனடிப்படையிலேனும் டிப்போச்சந்தியை அண்மிக்கும் வாகனங்கள் தமது வேகத்தைக்
கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு மேற்படி விபத்துக்களையோ அவற்றின் விளைவுகளையோ
குறைத்திருக்க முடியும்.
5. டிப்போச்சந்தி என்பது கிளிநொச்சி சேவைச்சந்தை கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையம்
பசுமைப்பூங்கா கிளிநொச்சி மாவட்டத்தின் தாய்ப்பாடசாலையான கிளிநொச்சி மத்திய
மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஆகியவற்றின்; அமைவிட மையமாக உள்ளதோடு கனகபுரம் வீதியின்
இருமருங்கும் அமைந்துள்ள வங்கிகள் வர்த்தக நிலையங்கள் திருமண மண்டபங்கள் யாழ்ப்பாணம் வவுனியா
பகுதிகளிலிருந்து A.09 வீதியூடாக கிளிநொச்சி நோக்கி வருகை தரும் வாகனங்கள் மற்றும் பொது மக்கள்
இரத்தினபுரம்ரூபவ் கனகபுரம் பகுதிகளிலிருந்து நகரை நோக்கி வருகைதரும் வாகனங்கள் மற்றும் மக்கள் தொகை
என்பவற்றை எதிர்கொள்கின்ற பிரதான மையமாக அமைந்துள்ளதால் அப்பகுதியில் சுற்றுவட்டமும்
வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான சமிக்ஞை விளக்குகளும்

அமைக்கப்பட வேண்டும் என்று 2016.12.24 ஆம் திகதி எனது இணைத் தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட
ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன்ரூபவ் கடந்த 2021.03.05 ஆம் திகதிய
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் என்னால் பிரஸ்தாபிக்கப்பட்டது.
6. அதனடிப்படையில் மேற்படி தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரிபிரதம
பொறியிலாளர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை கிளிநொச்சி அவர்களுக்கு 2017.02.03 ஆம் திகதிய
கடிதமும் மாகாணப் பணிப்பாளர்ரூபவ் வீதி அபிவிருத்தி அதிகாரசபை வடக்கு மாகாணம் அவர்களுக்கு 2018.08.05
ஆம் திகதிய கடிதமும் என்னால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை சுற்றுவட்டம் மற்றும் சமிக்ஞை
விளக்குகளை அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்பட்டதாக அறிய முடியவில்லை.
மேற்குறித்த விடயங்களின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட மக்கள்மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் எதிர்கொள்ளும் போக்குவரத்து நெருக்கடிகளையும்ரூபவ் அநியாயமாக நிகழ்ந்தேறும் விபத்துக்கள் உயிரிழப்புக்கள் மற்றும்  இழப்புக்களையும் கருதி இதுகுறித்து விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவன செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
குறிப்பு : இவ்விடயம் தொடர்பில் இல.156நாவலர் வீதி ஆனந்தபுரம் கிளிநொச்சியைச் சேர்ந்த திருமதி.ஸ்ரீவாணி
மனோராசன் அவர்களால் எனக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2021.11.20 ஆம் திகதிய கோரிக்கைக் கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இங்ஙனம்
மக்கள் பணியிலுள்ள
சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர்
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்
கிளிநொச்சி

1.அரசாங்க அதிபர் மாவட்டச் செயலகம் கிளிநொச்சி – தகவலுக்கும் நடவடிக்கைக்கு

2. தவிசாளர் கரைச்சிப் பிரதேசசபை கிளிநொச்சி
3. பிரதேச செயலாளர் பிரதேச செயலகம் கரைச்சி
4. மாகாணப் பணிப்பாளர் வீதி அபிவிருத்தி அதிகார சபை வடக்கு மாகாணம்
5. நிறைவேற்றுப் பொறியியலாளர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை கிளிநொச்சி
6. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் திணைக்களம் இரணைமடு
7. முதன்மைப் பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் நிலையம் கிளிநொச்சி
8. தலைவர் செயலாளர் வர்த்தகர் சங்கம் கிளிநொச்சி

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.