வெளிநாடு செல்ல ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் தகவல்கள், அறிவூட்டல் நிகழ்வு !

வெளிநாட்டு வேலை வாய்ப்பினை இலக்காகக் கொண்டு பயிற்சி பெற்ற ஊழியப்படை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சுபீட்சத்தின் நோக்கு அரசின் திட்டத்திற்கு அமைய வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மூலமாக வெளிநாடு செல்ல ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் தகவல்கள், அறிவூட்டல் நிகழ்வு நாளை (25) வியாழக்கிழமை காரைதீவு பிரதேச செயலகத்தில் காலை 9 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் ஜப்பான், கொரியா உட்பட பல நாடுகளில் உள்ள தொழில் வாய்ப்புகள் சம்பந்தமாகவும் கூடிய சம்பளத்துக்கு வெளிநாடுகளில் உள்ள தொழில்கள் சம்பந்தமாகவும் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. 18 தொடக்கம் 35 வயதுக்குட்பட்ட வெளிநாடு செல்ல ஆர்வமுள்ள காரைதீவு பிரதேச செயலகதிற்குட்பட்ட இளைஞர் யுவதிகள் தவறாது பங்குபற்றி பயன் பெற முடியும் என்றும் மேலதிக விபரங்களுக்கு 0775503000 /0760104506 எனும் இலக்கங்களை அழைக்குமாறும் காரைதீவு பிரதேச செயலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்