காரைதீவு தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசீறில் அவர்களுக்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு..

சம்மாந்துறை நீதிமன்ற நியாயாதிக்கத்திற்குட்பட்ட காரைதீவு பிரதேசத்தில் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளார் கிருஷ்னபிள்ளை ஜெயசிறில் என்பவரினால் தமிழ் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவரின் பிறந்தநாள் நினைவு கூர்ந்து, நாட்டில் நடந்த யுத்தத்தின் போது காணாமல்போன தமிழ் உறவினர்களின் குடும்பத்தினர் விளக்கேற்றி நினைவுகூறல் நடவடிக்கை மேற்க்கொள்ள இருப்பதாகவும், அதனை தொடர்ந்து அரச சார்பற்ற நிறுவனத்தின் (KDPS) தலைவரான இல்68, நடராஜா ஆனந்தா வீதி, காரைதீவு – 01 எனும் விலாசத்தை சேர்ந்த தர்மலிங்கம் ராஜலிங்கம் என்பவரின் தலைமையில் 200 வறிய பிள்ளைகளுக்கு உலர் உணவு பார்சல் பகிர்ந்தளித்து இந் நினைவேந்தலை நடத்த இருப்பதாகவும், அதற்கு எதிரானவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாகவும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நோய் மீண்டும் பரவி வருவதினாலும் அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தினாலும், சுகாதார நடவடிக்கைகளை இந்நாட்டு மக்கள் கடைப்பிடிக்கவேண்டி இருப்பதினாலும், இவ்வாறான நினைவு கூறல் சம்பவம் நடைபெறாமல் இருக்க தடை உத்தரவு ஒன்றினை பிறப்பிக்குமாறு கேட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.பொ.ப. ஜெயலத் இம்மன்றுக்கு அறிக்கை செய்துள்ளார். பொலிசாரினால் இம்மன்றில் செய்யப்பட்ட அறிக்கையின் பிரகாரம் சம்மாந்துறை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட காரைதீவு எனும் இடத்தில் 2021.11.22ஆம் திகதி தொடக்கம் 2021.11.27ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பொதுமக்களுக்கும் சொத்துக்களுக்கும் சேதத்தையும் அழிவையும் ஏற்படும் வகையிலும் ஏனைய பொதுமக்களுக்கு ஆத்திரத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தும் வகையிலும் கொவிட்-19 நோய் பரவும் வகையிலும் மேற்கொள்ளப்படும் ஏதாவது செயலை தடுத்து நிறுத்தும் பொருட்டு தடை உத்தரவு ஒன்றினை பிறப்பிப்பதற்கான ஏதுக்கள் இருப்பதாக திருப்தி அடைவதனால், அத்தகைய செயல்களிலிருந்து விலகி இருக்குமாறு 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை பிரிவு 106 (1) கீழ் செயற்பட்டு பின்வரும் நபர்களுக்கு மன்று கட்டளையாக்குகின்றது. கட்டளை பிறப்பிக்க வேண்டியவர்கள் 01. கிருஷ்னபிள்ளை ஜெயசிறில், இல:06, கடற்கரை வீதி, காரைதீவு 10. 02. தர்மலிங்கம் ராஜலிங்கம், இல.68 நடராஜா ஆனந்தா வீதி, காரைதீவு 01

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.