வாகனங்களில் பயணிப்போருக்கு பொலிஸார் விடுத்த அறிவித்தல் ; தவறினால் சட்ட நடவடிக்கை.

வாகனங்களில் செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவிக்கின்றார்.

கொவிட் பரவலை தவிர்க்கும் நோக்கில், மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கும் திட்டமொன்று பொலிஸாரினால்  முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வாகனங்களில் குடும்ப உறுப்பினர்கள் இல்லாதவர்களுடன், பலர் தற்போது பயணித்து வருவதாகவும், அவ்வாறானவர்கள் முகக் கவசம் அணிவதில்லை எனவும் அவர் கூறினார்.

முச்சக்கரவண்டி சாரதிகள், பயணிகளுடன் பயணிக்கும் போது, கட்டாயம் முகக் கவசத்தை அணிய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

முகக் கவசம் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற தவறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவிக்கின்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்