மாவீரர் நாள் தடை உத்தரவுகளை நீக்கக்கோரி முல்லை நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கு தாக்கல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு கடந்த 17ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட அறுபத்தொன்பது பேருக்கு தடை உத்தரவுகள் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு,முள்ளியவளை ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி ஐயன்குளம், புதுக்குடியிருப்பு ஆகிய ஏழு போலிஸ் நிலையங்களால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததற்கு அமைவாக குறித்த அறுபத்தொன்பது பேருக்கான தடை உத்தரவுகள் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான தடை உத்தரவை நீக்கக்கோரி நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தற்போது   இடம்பெற்று வருகின்றது.

தடைக்கட்டளை விதிக்கப்பட்டவர்கள் சார்பாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன் வழக்கில் முன்னிலையாகியுள்ளதுடன், தடைக்கட்டளை பெற்றவர்கள் சார்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தவராசா, கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.