பெய்த பாரிய மழை வீழ்ச்சியால் மாநகர வளாகம் வெள்ளத்தில்.

பெய்த பாரிய மழை வீழ்ச்சியின் காரணமாக மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு மாநகர ஆணையாளர் தலைமையிலான அணியினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மாநகரசபை வளாகம், மாநகர வாகனங்கள் தரிக்கும் இடம் மற்றும் கோட்டைப் பூங்கா பகுதி உட்பட்ட பரதேசங்கள் இன்று காலை பெய்த மழையினால் வெள்ளத்தில் நிரம்பியது.

மேற்படி பகுதிகளில் இருந்து நீர் ஆற்றுக்கு வடிந்தோடுவதற்கு ஒரு கால்வாய் இருந்து வந்த நிலையில் வெள்ள நீரை ஆற்றுக்குள் வடிந்தோடச் செய்யும் முகமாக மாநகர ஆணையாளரின் வழிகாட்டுதலுக்கு அமைய மாநகரசபை ஊழியர்கள் மூலம் கோட்டைப் பூங்கா பகுதியில் இன்னுமொரு கால்வாய் தற்காலிகமாக வெட்டபட்டு வெள்ள நீர் வடிந்தோடச் செய்யப்பட்டது.

இது தொடர்பில் மாநகர ஆணையாளர் தெரிவிக்கையில்,

புளியந்தீவு பிரதேசத்தில் உயர் பிரதேசங்களில் இருந்து வரும் தண்ணீர் மேற்படி பகுதிகளினூடாக வடிந்தோடுவது வழமை ஆனால் இன்று பெய்த பாரிய மழையினால் அவ்வாறு வடிந்தோடுவது தாமதமான நிலையில் மாநகர சபை உள்ளிட்ட பகுதிகள் குறிப்பிட்ட சில மணி நேரங்கள் வெள்ளம் நிறைந்து காணப்பட்டன. அதனைத் தொடர்ந்து எம்மால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் காரணமாக வெள்ள நீரை வடிந்தோடச் செய்ய முடிந்தது என இதன் போது அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்