மட்டக்களப்பு மாநகர சபை சுகாதார ஊழியர்களுக்கான சுகாதார பாதுகாப்பு அங்கிகள் மற்றும் வைரஸ் தொற்று நீக்கி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

(சுமன்)

மட்டக்களப்பு மாநகர சபை சுகாதார ஊழியர்களுக்கான  சுகாதார பாதுகாப்பு அங்கிகள் மற்றும் வைரஸ் தொற்று நீக்கி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  மட்டு  மாநகர மண்டபத்தில் நடைபெற்றது .

மட்டக்களப்பு மாநகர சபை உலக வங்கியின்  நிதி  உதவியின்  கீழ் முன்னெடுத்து வரும்  அபிவிருத்தி  திட்டங்களின்   ஒரு செயற்திட்டமாக மாநகர சபையில் பணிபுரியும்  ஊழியர்களுக்கான பாதுகாப்பு சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன .

அந்தவகையில்  தற்போதைய அசாதாரண சூழ்நிலை மற்றும்  காலநிலை  மாற்றத்தின் காரமாக ஏற்படும் வைரஸ் தொற்றுகளில் இருந்து  ஊழியர்களின் சுகாதாரத்தினை பாதுகாக்கும் வகையில்  மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் சுகாதார ஊழியர்களுக்கான சுகாதார பாதுகாப்பு அங்கிகள் மற்றும் வைரஸ் தொற்று நீக்கி உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் எம் .தயாபரன் இ பிரதி ஆணையாளர் . மாநகர பொறியிலாளர் இமாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு காதார ஊழியர்களுக்கான  சுகாதார பாதுகாப்பு அங்கிகள் மற்றும் வைரஸ் தொற்று நீக்கி உபகரணங்கள்  வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்