உலக வராலற்றில் மரணித்தவர் எதிரிப்படை வீரராக இருந்தாலும் வணக்கம் செய்வதற்கு அனுமதி கொடுப்பதே ஒரு ஜனநாயக நாட்டின் பண்பு… (ஜனநாயகப் பேராளிகள் கட்சியின் செயலாளர் – இ.கதிர்)

(சுமன்)

உலக வராலற்றில் மரணித்தவர் எதிரிப்படை வீரராக இருந்தாலும் அவரது போராட்ட சின்னங்களை அழிக்காது, அதை வணக்கம் செய்வதற்கு அனுமதி கொடுப்பதே ஒரு ஜனநாயக நாட்டின் பண்பு. நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிராகவோ, சிங்களத் தேசியத்திற்கு எதிராகவோ போராடவில்லை. எமது இனம் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான யுத்தத்திற்கு எதிராகப் போராடி இந்த மண்ணிலே வீரமரணம் அடைந்த எமது மாவீரர்களை நினைவு கூருவதற்கு சட்டரீதியாக முழு அனுமதியையும் எமக்கு வழங்க வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

மாவீரர் நாள் தொடர்பிலான தடையுத்தரவுகள் தொடர்பபில் கருத்துத் தெரிவிக்கும் பொதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எத்தடைகள் போட்டாலும் அவற்றைத் தகர்தெறிந்து எமது வீரர்களுக்கான இதயபூர்வமான அஞ்சலியை நாம் முன்னெடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காலத்தால் அழியாத மாவீரர்களின் நினைவு வாரத்தில் நாம் இன்று பெரும் துயரத்தைச் சந்தித்து நிற்கின்றோம். சிங்களப் பெருந்தேசியவாதத்தின் இன அடக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்திப போராடி வீரமரணமடைந்த எமது மாவீரச் செல்வங்களை நினைவு கூருவதற்கு சிங்கள அரசாங்கம் பல தடைகளை எமக்குத் தந்துள்ளது. உண்மையிலேயே தன் இனத்தின் விடுதலைக்காகப் போராடி மரணித்த எமது வீரர்கள் இந்த மண்ணுக்குள்ளே உறங்குகின்றார்கள். அவர்களின் தியாகங்கள், அர்ப்பணிப்புகள் என்றுமே எமது மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான, விடுதலைக்கான அர்ப்பணிப்பாகவே அமைந்தது.

உண்மையான தேசிய விடுதலையை நேசித்த எமது மாவீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலியைச் செலுத்தி எமது மக்கள் நிம்மதியடையும் இந்த நினைவு வாரத்தில் நொவம்பர் 27 மாவீரர்களின் இறுதி நாள் நிகழ்வை மெற்கொள்வதற்கு பேரினவாதம் தடைவித்தித்திருக்கின்றது.

ஜனநாயக நாடு என்று சொல்லப்படும் இலங்கையிலே, தங்களுடைய சொந்த மக்களின் விடுதலைக்காகப் போராடி மரணித்த மக்களை நினைவுகூருவதற்கு முடியாமல் இருக்கின்றது. உலகத்தில் எங்குமில்லாதவாறு அடக்குமுறையை எமது இனத்தின் மீது திணித்து நிற்கின்றது. உலக வராலற்றில் மரணித்தவர் எதிரிப்படை வீரராக இருந்தாலும் அவரது போராட்ட சின்னங்களை அழிக்காது, அதை வணக்கம் செய்வதற்கு அனுமதி கொடுப்பதே ஒரு ஜனநாயக நாட்டின் பண்பு. உலகின் பல ஜனநாயக நாடுகள் அவ்வாறு தான் செய்கின்றன. ஆனால் இங்கே எமது வீரர்களுக்கு நினைவு கூரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் மாவீரர் துயிலுமில்லங்களை இடித்து தரைமட்டமாக்கி எமது மனங்களில் ஆறாத ரணத்தை உருவாக்கிய இலங்கை அரசாங்கம் இன்று எமது துயிலுமில்லங்களுக்குள் தாங்கள் புகுந்து தியாகத்தின் சின்னங்களை கால்களால் மிதிக்கின்றார்கள்.

போராட்டம் என்பது இனத்தின் விடுதலைக்காகவும், நாம் சுதந்திரமாக வழவேண்டும், ஒரு சமதர்மமான நாடு இங்கே அமைய வேண்டும் என்பதற்ககாகவுமே நடாத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் தங்களுடைய பிள்ளைகளை மனமுவந்து தங்களின் விடுதலைக்காக எமது பெற்றோர்கள் ஒப்படைத்தார்கள். எமது உறவுகள் அனைவரும் இந்தப் போராட்;டதிற்குப் பங்களிப்புச் செய்தார்கள். அந்த அர்ப்பணிப்பும், தியாகமும் இந்த உலகத்தில் தமிழினம் இருக்கும் வரை வளர்ச்சிபெற்று ஒளிவீசும்.

எமது வீரர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தி அதனை அழிக்க நினைக்கும் சிங்களப் பெருந்தேசியவாதம், தன்னுடைய இறுமாப்புக் கொண்ட கைகளால் தாங்களே தமக்கு மண் அள்ளிப் போடும் நிலைமை இந்த இலங்கைத் தீவிலே உருவாகிக் கொண்டிருக்கின்றது. அப்போது எமது இனம் நிச்சயம் விடுதலை பெறும்.

எமது அகிம்சை, ஆயுதம், அரசியல் ரீதியான போராட்டங்கள் அனைத்தும் தமிழ்த் தேசியத்தை, தமிழினத்தை உலகத்தின் ஒரு உச்ச நிலைக்குக் கொண்டு சென்றது. எமது போராட்டமே தமிழன் இந்த உலகத்தில் தனித்துவமான இனம் என்பதை பறைசாற்றி நிற்கின்றது. இந்த வரலாற்று உண்iயை எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எந்த சக்தியாலும் அழிக்க முடியாது.

நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிராகவோ, சிங்களத் தேசியத்திற்கு எதிராகவோ போராடியவர்கள் அல்ல. எமது தமிழினத்தின் விடுதலைக்காக எமது தேசியத்திற்காக எமது மண்ணிலே போராடி எமது விடுதலைக்கான கொள்கையை நிலைநிறுத்தினோம். இலங்கையின் பயங்கரவாத அரசாங்கம் எம் மீது கொடூரமான யுத்தத்தைப் புரிந்து விட்டு சர்வதேச நாடுகளில் இருந்து தப்பித்துக் கௌ;வதற்காக தம்மை ஒரு ஜனநாயக அரசியல் நாடாகக் காட்டிக் கொண்டு ஒரு பொய்யான போர்வையை மூடிக் கொண்டு வலம் வருகின்றது.

எமது மக்கள் இலட்சக் கணக்கானோர் கொல்லப்பட்டார்கள் இந்தக் கொலைகளைச் செய்தவர்கள் இன்று தங்களை ஜனநாயகவாதிகளாக, மனித நேய செயற்பாட்டாளர்களாக இந்த உலகிற்குக் காட்டி தங்களை நியாயப்படுத்தி வருகின்றார்கள்.

உண்மையாக ஜனநாயகத்தை நேசிக்கின்ற சர்வதேச சமூகம் எமது மக்களின் அர்ப்பணிப்புகளையும், வீரர்களின் தியாகங்களையும்; புரிந்துகொண்டு எவ்வாறு எமது இனத்தின் மீது அடக்குமுறை, இனஅழிப்பு என்பன மேற்கொள்ளப்பட்டன என அனைத்தையும், சட்டரீதியாக ஒரு விசாரணையைச் செய்வதற்கான பொறிமுறையை அமைத்து சிங்கள தேசத்திற்கு ஒரு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதை நாங்கள் மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த மாவீரர் நாளிலே இந்த செய்தியை உலகத்திற்கும் எமது மக்களுக்கும், சிங்கள தேசத்திற்கும், சிங்கள மக்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்,

நாங்கள் அமைதியை நேசிக்கின்றவர்கள். உலகத்திலே எங்குமே அமைதியை விரும்பகின்றவர்கள். போரிலே ஈடுபட்டு அந்த வடுக்களையும், ரணங்களையும் உணர்ந்தவர்கள்தான் அமைதியை நோக்கி நகருவார்கள். நாங்கள் அமைதியை நோக்கி நகருகின்றோம். எமது ஜனநாயக வழி செயற்பாடுகளுக்கு மதிப்பளித்து கடந்த காலத்திலே உங்களால் எமது இனம் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான யுத்தத்திற்கு எதிராக இராணுவத்துடன் போராடி இந்த மண்ணிலே வீரமரணம் அடைந்த எமது மாவீரர்களை நினைவு கூருவதற்கு சட்டரீதியாக முழு அனுமதியையும் எமக்கு வழங்க வேண்டும். எமது மக்கள் முழுச் சுதந்திரமாக எமது வீரர்களை நினைவுகூர வேண்டும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்த சிங்கள தேசம் அங்கீகரிக்க வேண்டும். அதுவரைக்கும் எத்தடைகள் போட்டாலும் அவற்றைத் தகர்தெறிந்து எமது வீரர்களுக்கான இதயபூர்வமான அஞ்சலியை நாம் முன்னெடுப்போம். இந்த எழுச்சிநாளைத் தமிழீழ தேசிய எழுச்சிநாளாகப் பிரகடணப்படுத்தியே நாங்கள் நினைவுகூர்ந்து வருகின்றோம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.