பெரியநீலாவணை விஷ்ணு கோவில் வீதி 72.7 மில்லியன் ரூபா செலவில் காபட் வீதியாக அபிவிருவிருத்தி – வேலைத்திட்டம் ஆரம்பம்

ஏ.எல்.எம்.ஷினாஸ்)
 
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ‘கிராமிய வீதிகளை காபட் வீதிகளாக அபிவிருத்தி செய்யும்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பெரியநீலாவணை விஷ்ணு கோவில் வீதி  72.7 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (25.11.2021) நடைபெற்றது.

கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை சுபத்திராம விகாராதிபதி ரன்முத்துகல தேரர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீதி அபிவிருத்திக்கா அடிக்கல்லை நாட்டி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பெரியநீலாவணை விஷ்ணு கோவில் வீதி நீண்டகாலமாக குன்றும் – குழியுமாக காணப்பட்டது. குறித்து இந்த வீதியை அபிவிருத்தி செய்து தர வேண்டும் என்று மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரிடத்திலும் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.

இந் நிலையில்தற்போதைய அரசாங்கத்தின் கிராமிய வீதிகளை காபட் விதிகளாக தரம் உயர்த்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வீதியை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகள் அமைச்சு, கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சு, ஆகிவற்றின் நேரடி கண்காணிப்பின் கீழ் அபிவிருத்திப்பணிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்துள்ளது.

2.67 கிலோ மீட்டர் நீளம் கொண்ட காபட் வீதியாக இந்த வீதிஅபிவிருத்தி செய்யப்படுவதால்  பெரியநீலாவணை பிரதேச மக்கள், கடற்தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், உட்பட பொதுமக்கள் நன்மை அடைவார்கள். வீதி அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான விமலவீர திசாநாயக்க, டப்ளியு.டி. வீரசிங்க, மற்றும் மாநகர சபை உறுப்பினர்களுக்கும் மக்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி. சுஜித் பிரியந்த, இராணுவ கட்டளை அதிகாரி மேஜர், ஜெயந்த எதிரிசிங்க, மாநகர சபை உறுப்பினர்களான கதிரமலை செல்வராஜா, எஸ். குபேரன் ஆகியோரும் பெரியநீலாவணை வெஸ்டன் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், ஆலயங்களின் பிரதிநிதிகள், மகளிர் அமைப்புகளின் உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூக நலன் விரும்பிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்