பல கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் நினைவேந்தலை அனுஸ்டித்தார் பா.உ கலையரசன்…

(சுமன்)

இன்றைய மாவீரர் தின அனுஸ்டிப்பு நிகழ்விற்கு வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பல தடையுத்தரவுகள் மற்றும் கெடுபிடிகள் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டிருந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி இன்றைய மாவீரர் தின நினைவேந்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறப்பினர் தவராசா கலையரசன் மிக எளிமையாகவும், உணர்வு பூர்வமாகவும் அனுஸ்டித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் பல பொலிஸ் நிலையங்கள் மூலம் தடையுத்தரவுகள் பெறப்பட்டிருந்தாலும் மாவீரர்களுக்கான அஞ்சலியை குறித்த நேரத்தில் கௌரவமாக மேற்கொண்டார்.

இதன்போது ஈகைச்சுடர் மற்றும் தீபங்கள் ஏற்றி ஒரு நிமிட அகவணக்கத்துடன் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்