“ பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் ” மாவட்ட நிகழ்வு அம்பாறையில் : அரசாங்க அதிபர் பெண்கள் உரிமைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் ” மாவட்ட நிகழ்வு அம்பாறையில் : அரசாங்க அதிபர் பெண்கள் உரிமைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்

அம்பாறை கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்படும் SGBV திட்டத்தின் கீழ் “ பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் ” தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாவட்ட நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை அம்பாறை தனியார் வரவேற்பு மண்டப கேட்போர் கூடத்தில் கப்சோ நிறுவனத்தின் பணிப்பாளர் காமில் இம்டாட் தலைமையில் நடைபெற்றது.

“Orange the World பெண்களுக்கு எதிரான வன்முறையை இப்போதே ஒழிக்கவும்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல். பண்டாரநாயக்க கலந்து கொண்டார். மேலும் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன், வைத்தியர்  சமீர, மாவட்ட சிறுவர் பெண்கள் பிரிவின் பிரதம பொலிஸ் பரிசோதகர் கமகே, மாவட்ட மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேகா எதிரிசிங்கே, ஆசிய நிலையத்தின் பிரதிநிதி முஹம்மட் ஜவாஹிர், அம்பாறை பிரிவு ஒன்றின் பொலிஸ் அத்தியட்சகர்  ஹேரத், அம்பாறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார என பலரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட திணைக்களங்களின் பிரதிநிதிகள் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்மந்தமான முன்மொளிவுகளை முன்வைத்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபரினால் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தில் பணியாற்றும் சகல பொலிஸ் நிலையங்களினதும் சிறுவர் மகளீர் பிரிவு பொறுப்பதிகாரிகள் , சகல பிரதேச செயலகங்களிலும் பணியாற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவள உத்தியோகத்தர்கள், சுகாதார பிரிவு உத்தியோகத்தர்கள், ஏனைய அரச சார்பற்ற நிறுவனக்களின் பிரதிநிதிகள், கப்சோ நிறுவன உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.