இராணுவ ட்ரக் வாகனம் விபத்து; இரு இராணுவத்தினர் படுகாயம்

பொலன்னறுவை – மெதிரிகிரிய பிரதான வீதியின் ஹிங்குராங்கொட மாரசிங்க தோட்டப் பகுதியில் இராணுவ ட்ரக் வண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (01) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இரு இராணுவத்தினர் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த இராணுவ ட்ரக் சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெலிகந்த, புனானை பகுதியிலுள்ள இராணுவ முகாமிலிருந்து ஹிங்குராங்கொட பகுதியிலுள்ள இராணுவ முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
மேலும், விபத்தின் போது மின் கம்பத்துக்கு அருகில் இருந்த வீட்டின் மீது ட்ரக் மோதியது.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த எவருக்கும் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை.
விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.