எரிவாயுசிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் -முடிவுகளின்றி முடிந்தது விசேட குழுவின் கூட்டம்

எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக இன்று இடம்பெற்ற விசேட ஆலோசனை குழுவின் கூட்டத்தில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களே இந்த வெடிப்பிற்கு காரணமாகயிருக்கலாம் என மொரட்டுவ பல்கலைகழக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார் என ஹர்சா டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
சந்தையில் உள்ள எரிவாயு சிலிண்டர்களை உடனடியாக மாற்றுமாறு எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்றைய சந்திப்பு முடிவுகள் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது என்பதை அமைச்சர் லசந்த அலகியவண்ண உறுதி செய்துள்ளார்.
இன்றைய சந்திப்பில் கலந்துகொண்ட பொலிஸார் இதுவரை 11 வெடிப்புச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதுவரை எவரும் உயிரிழக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட நிபுணர்கள் சிலர் சிலிண்டர்கள் வெடிக்காது ரெகுலேட்டர்களே வெடிக்கும் என தெரிவித்துள்ளனர்.
No photo description available.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.